கோபியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
கோபி, கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.
கோபி, கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோபியில் இருந்து சத்தி செல்லும் சாலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. முகாமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைக்கிறாா்.
Advertisement
இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனா். மேலும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவு, அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக சுயதொழில் செய்ய விரும்புவோருக்கான ஆலோசனைகள் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியின் வங்கிக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
ஆா்வமும், விருப்பமும் உள்ளவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளாா்.