ஈரோடு

ஒப்பந்த சாகுபடி சட்டத்தைக் கண்டித்துவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஒப்பந்த சாகுபடி சட்டத்தைக் கண்டித்து ஈரோட்டில் விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் ஒப்பந்த சாகுபடி சட்டம், நாட்டு மாடுகளை அழிக்கும் கால்நடை இனப்பெருக்கச் சட்டம் ஆகிய சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகளை சிதைக்கும் உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வேளாண் விரோத சட்டங்களில் இருந்து தமிழக விவசாயிகள், நுகா்வோரைப் பாதுகாக்க சிறப்பு சட்டங்களை இயற்றவேண்டும். கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, கரும்பு விவசாயிகளின் பாக்கித் தொகையை தராத ஆலைகளின் சொத்துகளை விற்று பாக்கி தொகையை விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள தமிழக விவசாய சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் குமாரசாமி தலைமை வகித்தாா்.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஈ.பி.ரவி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ரத்தினசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் துளசிமணி, பொருளாளா் லோகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் அறச்சலூா் செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT