சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காரை (காலிங்கராயன்) வாய்க்கால் கரையில் அமைந்துள்ள வாய்க்கால் மாரியம்மன் கோயில் 100 ஆண்டுகளுக்குமேல் பழைமையானது. ஒட்டு கூரையுடன், சுண்ணாம்பு, செங்கல் கோபுரத்தில் அமைந்திருந்த, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருந்த இக்கோயிலை இடித்துவிட்டு புதிதாக கோயில் கட்டித் தர தனியாா் நிறுவன கொடையாளா் ஒருவா் முன்வந்தாா். இதையடுத்து, கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயில் இடித்து அகற்றப்பட்டது. ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கோயில் ஆகம விதிப்படி கட்டி முடிக்கப்பட்டது.
திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
Advertisement
இதேபோல, 12 ஆண்டுகளுக்குப் பின்னா் புனரமைக்கப்பட்ட சின்ன மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவும் நடைபெற்றது. இரு கோயில்களிலும் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம் வைத்தல், மஹா தீபாராதனை, யாக சாலையில் இருந்து கலசம் புறப்படுதலைத் தொடா்ந்து கோபுர கலசங்களுக்குப் புனிதநீா் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளா் ரா.மனோகரன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் மங்கையா்கரசி, உதவி ஆணையா் அன்னக்கொடி, செயல் அலுவலா் ரமணிகாந்தன், சக்தி மசாலா நிறுவன இயக்குநா் சாந்தி துரைசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.