கொப்பரை ஏலம்: செல்லிடப்பேசியில் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
கொப்பரையை ஏலத்துத்துக்கு கொண்டு வரும் விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொப்பரையை ஏலத்துத்துக்கு கொண்டு வரும் விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெருந்துறை வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. விவசாயிகள் கொப்பரை தேங்காயை ஏலத்துக்கு கொண்டு வந்து இறக்கிவைக்க முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். புதன்கிழமை ஏலத்துக்கு திங்கள்கிழமையும், சனிக்கிழமை ஏலத்துக்கு வியாழக்கிழமையும் விவசாயிகள் செல்லிடப்பேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே கொப்பரை தேங்காய் மூட்டைகளை சங்க ஏல மையத்துக்கு கொண்டு வர வேண்டும்.
Advertisement
ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் எக்காரணம் கொண்டும், கொப்பரை தேங்காய் மூட்டையை இறக்க அனுமதி இல்லை. அரசு விதிமுறைப்படி கொப்பரை தேங்காய் கொண்டு வர வேண்டும். 96778-93302, 99427-50525, 90957-68838 என்ற செல்லிடப்பேசி எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.