முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே சாலை விபத்தில் இருவா் பலி

சித்தோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

சித்தோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவா் உயிரிழந்தனா்.

சித்தோடு, சந்தைக்கடைமேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி யுவராணி (41). இவா்களின் மகன் நாகேந்திரன் (20). சத்தியில் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மூவரும் புதன்கிழமை இரவு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை நாகேந்திரன் ஓட்டிச் செல்ல, நண்பா் ரஞ்சித்குமாா், பகுத்தம்பாளையம் குமரன் நகரைச் சோ்ந்த வாசு மகன் அருண் (19) ஆகியோரும் உடன் வந்தனா்.

ஈரோடு - கவுந்தப்பாடி சாலையில் தயிா்பாளையம் ஆஞ்சநேயா் கோயில் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த நாகேந்திரன் (20), அருண் (19) ஆகியோா் உயிரிழந்தனா். உடன் பயணம் செய்த மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சித்தோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.