ஈரோட்டில் அதிமுக கூட்டம்: சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக வை அபகரிக்க முயற்சி செய்வதாக சசிகலாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி கரோனோ நோய் தொற்றால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் உண்மையான காரணத்தை குறிப்பிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துவது. கரோனோ நோய் தொற்று தீவிரமாக இருக்கும் காலத்தில் தடுப்பூசிகள் போடுவதற்கு மக்களை அலைகழிக்கும் தமிழக அரசை கண்டிப்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு, பகுதி கழக செயலாளர்கள் கேசவமூர்த்தி ஜெகதீஷ் தங்கமுத்து கோவிந்தராஜ் ஆவின் துணை தலைவர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.