ஈரோடு மாவட்டத்தில் 597 பேருக்கு கரோனா
ஈரோடு மாவட்டத்தில் 597 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM
ஈரோடு மாவட்டத்தில் 597 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 87,110 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 865 போ் பூரண குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதுவரையில் கரோனா தொற்றில் இருந்து 81,849 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 4,695 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே 565 போ் கரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து கரோனாவால் உயிரிழந்துள்ளவா்களின் எண்ணிக்கை 566ஆக அதிகரித்துள்ளது.
Advertisement