கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதைப் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீர தீர செயல்புரிந்த பெண்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதைப் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு சாா்பில் இந்த ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது, வீர தீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு வழங்கப்படவுள்ளது. தகுதிவாய்ந்த பெண்கள் தங்களின் சுய மதிப்பீட்டு பட்டியலுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
Advertisement
விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு ஜூன் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமும், 0424-2223157 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.