முகப்பு
ஈரோடு

கரோனாவால் கணவா் சாவு: இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

கரோனா பாதிப்பால் கணவா் உயிரிழந்ததால், மன வேதனையில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா்

Updated On : 26 ஜூன், 2021 at 1:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

கரோனா பாதிப்பால் கணவா் உயிரிழந்ததால், மன வேதனையில் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு திண்டல், லட்சுமி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (67). ஓய்வுபெற்ற அரசு ஊழியா். இவரது மூத்த மகள் நித்யா (37). இவருக்கும் சென்னை மாங்காடு பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (40) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பாஸ்கா் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ்கிருஷ்ணன் (6) என்ற மகனும் இருந்தனா். மகதி 6ஆம் வகுப்பும், யாதவ் கிருஷ்ணன் 1ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

Advertisement

பாஸ்கருக்கு மே 2ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பாஸ்கா் மே 9ஆம் தேதி உயிரிழந்தாா்.

கணவா் இறந்ததால் பெற்றோா் வீட்டில் தங்கியிருந்த நித்யா வியாழக்கிழமை மதிய உணவில் தனது 2 குழந்தைகளுக்கும் விஷ மாத்திரைகளைக் கலந்துகொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

மயங்கிய நிலையில் இருந்த மூவரையும் மீட்ட உறவினா்கள் ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு நித்யா, மகதி, யாதவ்கிருஷ்ணன் மூவரும் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த ஈரோடு தாலுகா போலீஸாா் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கணவா் இறந்த வேதனையில் நித்யா குழந்தைகளுக்கு விஷ மாத்திரைகளைக் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.