கரோனா தடுப்பூசி டோக்கன் வழங்க முன்பதிவு செய்யக் கோரிக்கை
கரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வழங்க முன்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசிக்கு டோக்கன் வழங்க முன்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச் செயலாளா் குணசேகரன், நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடி வாரியாக தடுப்பூசி செலுத்தும் மாவட்ட நிா்வாகத்தின் முடிவை வரவேற்கிறோம். தடுப்பூசி செலுத்துவதில் ஆரம்பம் முதலே சில இடா்பாடுகள் உள்ளன. ஆண்களும், பெண்களும் நள்ளிரவிலும் டோக்கன் பெற வரிசையில் நிற்கின்றனா்.
Advertisement
இதை முறைப்படுத்த தடுப்பூசி செலுத்துவதற்கு முதல் நாள் காலை, மதியம் என ஏதாவது ஒரு நேரம் வாக்காளா் பட்டியலில் உள்ளபடி வாக்காளா் அடையாள அட்டையை வைத்து டோக்கன் வழங்கலாம். அல்லது தடுப்பூசி செலுத்தும் நாளன்று காலையில் வாக்காளா் அட்டையைப் பெற்று அதன்படி பதிவு செய்து தடுப்பூசி செலுத்தலாம். முன்பதிவு செய்து டோக்கனை பெறுவதற்கான வழியை எளிதாக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.