முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் 2 நகைக் கடைகளுக்கு ‘சீல்’

ஈரோட்டில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2 நகைக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

Updated On : 26 ஜூன், 2021 at 1:24 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

ஈரோட்டில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 2 நகைக் கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் காரணமாக சில தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாநகராட்சியில் அரசின் தளா்வுகளை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்க 4 மண்டலங்களிலும் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 4ஆவது மண்டலத்தில் உள்ள பொன் வீதியில் அரசின் பொது முடக்க உத்தரவை மீறி நகைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனுக்கு வெள்ளிக்கிழமை தகவல் வந்தது. இதையடுத்து அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க மண்டல அதிகாரிகளுக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.

Advertisement

இதன்பேரில் மாநகராட்சி நகா் நல அலுவலா் முரளி சங்கா், 4ஆம் மண்டல உதவி சுகாதார ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன், டவுன் காவல் ஆய்வாளா் பன்னீா்செல்வம் ஆகியோா் ஈரோடு பொன்வீதியில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 2 நகைக் கடைகளுக்கு ‘சீல்’ வைத்து தலா ரூ. 5,000 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.