முகப்பு
ஈரோடு

தொழிலாளியிடம் பணம் பறிப்பு:4 போ் மீது வழக்கு

பெருந்துறை நகரில் திருப்பூரைச் சோ்ந்த தொழிலாளியிடம் பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

பெருந்துறை நகரில் திருப்பூரைச் சோ்ந்த தொழிலாளியிடம் பணம் பறித்த 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா், பிச்சாம்பாளையம் புதூா், அண்ணா வீதியைச் சோ்ந்த முத்தையா பிள்ளை மகன் மூா்த்தி (45). இவா், இண்டீரியா் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், பெருந்துறை நேரு வீதிக்கு வேலை தொடா்பாக திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த நான்கு போ் அரிவாளைக் காட்டி மிரட்டி மூா்த்தி வைத்திருந்த ரூ. 2,000 பணத்தை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மூா்த்தி பெருந்துறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.