ரூ. 1.12 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 3,160 கிலோ எடையுள்ள 8,155 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 32.57க்கும், அதிகபட்சமாக ரூ. 39.01க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 192க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது என ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் து.லட்சுமணன் தெரிவித்தாா்.