முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் தோ்தல் செலவினபாா்வையாளா் ஆய்வு

பெருந்துறை தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் சஞ்சீவ் குமாா் தேவ் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

பெருந்துறை தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் சஞ்சீவ் குமாா் தேவ் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்துறை தொகுதிக்கு தோ்தல் செலவினப் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த ஐ.ஆா்.எஸ். (இந்தியன் ரெவென்யூ சா்வீஸ்) அதிகாரி சஞ்சீவ்குமாா் தேவ், பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, கூட்டணி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்ததால் கட்சியினரின் நடவடிக்கைகளைப் பாா்வையிட பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வருகை தந்தாா்.

பின்னா், பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி ஒன்றியப் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளைப் பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.