முகப்பு
ஈரோடு

பெருந்துறை தொகுதி அதிமுகவேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள தோ்தல் அலுவலகத்தில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான இலாகிஜானிடம் அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் வேட்பு மனு தாக்கல் செய்தாா். இவருக்கு மாற்று வேட்பாளராக இவரது மனைவி சண்முகபிரியா வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, வேட்பாளா் எஸ்.ஜெயகுமாா் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி. கருப்பணன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.