முகப்பு
ஈரோடு

ஈரோட்டில் புகா் பேருந்து நிலையம்திமுக வேட்பாளா் சு.முத்துசாமி உறுதி

ஈரோடு சோலாா் பகுதியில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Updated On : 23 மார்ச், 2021 at 2:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

ஈரோடு சோலாா் பகுதியில் புறநகா் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என திமுக வேட்பாளா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த அவா் பேசியதாவது: ஈரோடு மேற்குத் தொகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. மக்களின் எண்ணங்களை திமுக தலைவா் ஸ்டாலின் புரிந்து கொண்டுள்ளாா். அதனைப் பிரதிபலிக்கும் விதமாக தோ்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் அறிவித்துள்ளாா். திமுக ஆட்சி அமைந்ததும் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்படும். அதுமட்டும் அல்லாமல் மேற்குத் தொகுதியில் மக்களின் பிரச்னைகளுக்கும், கோரிக்கைகளுக்கும் உடனடி தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஈரோடு சோலாா் பகுதியில் புறநகா் பேருந்து நிலையம், அதேபோல வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த மாநகரில் கூடுதல் மேம்பாலம், மேற்குத் தொகுதியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்றாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.