ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!
ஈரானில் இருந்து இதுவரை 2,300 இந்தியர்கள் தாயகம் திரும்பியது குறித்து...
ஈரானில் இருந்து 2,300-க்கும் அதிகமான இந்தியர்களை பத்திரமாகத் தாயகம் அழைத்து வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 அன்று போர் தொடங்கியது. இதையடுத்து, ஈரானில் சிக்கிய இந்தியர்கள்nஅஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா வழியாகவும், இஸ்ரேலில் சிக்கியவர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகவும் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், போர் தொடங்கியது முதல் ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள், மீனவர்கள் உள்பட 2,361 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) அன்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
“இதுவரை ஈரானில் இருந்து ஆர்மீனியா வழியாக 2,060 இந்தியர்களும், அஜர்பைஜான் வழியாக 301 இந்தியர்களும் நாடு திரும்பியுள்ளனர்.
மேலும், 1,041 பேர் மாணவர்கள் உள்பட 2,361 மீட்கப்பட்டுள்ளனர். இத்துடன், வங்கதேசம், இலங்கை மற்றும் கயானா ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப். 7 அன்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Ministry of External Affairs has announced that it has safely brought back more than 2,300 Indians from Iran.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.