FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சவப்பெட்டிகளில் டிரம்ப் குடும்பத்தினர்: ஈரானில் வைக்கப்பட்டுள்ள பேனர்!

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரின் மத்தியில் மிகப்பெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூலை 2026, 11:00 pm IST
ஈரானில் வைக்கப்பட்டுள்ள பேனர்
பகிர்:

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகரின் மத்தியில் பெரிய அளவிலான பேனர் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கக் கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளுக்கு மேல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில், டிரம்பின் ஐந்து பிள்ளைகளான இவான்கா, டான் ஜூனியர், எரிக், டிஃபானி, பேரான் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னணியில் வெள்ளை மாளிகை எரிவதைப் போன்று பேனர் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பேனரில் ‘ரத்ததிற்கு ரத்தம்’ என்ற வாசகம் பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதுபோன்று நகரின் முக்கியப் பகுதியில் பேனர் வைத்து ஈரான் அச்சுறுத்துவது இது இரண்டாவது முறை.

Advertisement

Advertisement

முன்னதாக, மத்திய தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தில் அமெரிக்க அதிபர் சவப்பெட்டியில் படுத்திருக்கும் காட்சியைப் போன்று ஈரான் மிகப்பெரிய பேனர் வைத்திருந்தது.

ஈரான் நீண்ட காலமாக பொது இடங்களை அரசியல் தகவல் தொடர்புக்கானக் களமாகப் பயன்படுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்கா - இஸ்ரேல் உடன் போர் தொடங்கியதிலிருந்து புரட்சிகரக் காட்சிகள், போர் நினைவுச்சின்னங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கும் பிரம்மாண்டமான விளம்பர பேனர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி தனது தந்தையின் படுகொலைக்கான நிச்சயமாக பழிவாங்குவோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி தனியார் செய்தி நிறுவனத்துக்கு டிரம்ப் அளித்த பேட்டியில், “நான் நீண்ட காலமாக அவர்களின் பட்டியலில் இருக்கிறேன். அதைத்தான் நாம் இப்போது கையாள்கிறோம். ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அவர்கள் இதுவரை பார்க்காத அளவில் அவர்கள் மீது குண்டு வீச வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.

summary

Trump family members in coffins: Banner displayed in Iran!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments