FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்! - டிரம்ப் எச்சரிக்கை

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது தொடர்பாக...

Updated On : 11 ஜூலை 2026, 11:43 am IST
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். - கோப்புப் படம்
பகிர்:

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் 17 ஆம் தேதி ஸ்விட்சர்லாந்தில் இடைக்கால அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.

Advertisement

Advertisement

ஆகையால், கையெழுத்திடப்பட்ட அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடர்வதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது தாக்கியதால் இரு நாடுகளும் மீண்டும் போரைத் தொடர்ந்துள்ளன. இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ஈரானை குறிவைத்து ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்நிலையில் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் ஏவப்பட உள்ளன. அமெரிக்காவின் தற்போதைய அதிபரான என்னை படுகொலை செய்ய அல்லது படுகொலை செய்ய முயற்சிக்க ஈரான் அரசாங்கம் அதற்கான உத்தரவுகள் ஏற்கெனவே, பிறப்பித்துள்ளன. போர் இன்னும் ஓர் ஆண்டு தொடர்ந்தாலும் ஈரானை முற்றிலுமாக அழிக்க அமெரிக்க ராணுவம் தயாராகவும் ஆற்றலுடனும் உள்ளது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று டொனால்ட் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

summary

US President Donald Trump has warned that thousands of missiles are ready, targeting Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments