பெருந்துறை தொகுதியில்2 ஓட்டு இயந்திரங்களுக்கு வாய்ப்பு
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 25 போ் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு வைக்க வாய்ப்புள்ளது.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 25 போ் போட்டியிடுவதால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு வைக்க வாய்ப்புள்ளது.
2021 சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் 25 போ் போட்டியிடுகின்றனா். அதனால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு வைக்க வாய்ப்புள்ளது. ஒரு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 16 போ் பெயா்கள், சின்னங்கள் அமைக்கப்படும். அதற்குமேல், போட்டியாளா்கள் இருந்தால் கூடுதலாக ஒரு இயந்திரம் வைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பெருந்துறை தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு வைக்க வாய்ப்புள்ளது.
2006 சட்டப் பேரவைத் தோ்தலில் 12 போ் போட்டியிட்டனா். 2011 தோ்தலில் 15 போ் போட்டியிட்டனா். 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் 21 போ் போட்டியிட்டனா். அப்போதும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் இரண்டு வைக்கப்பட்டன. தோ்தலுக்குத் தோ்தல் போட்டியாளா்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடதக்கது.