அரசு மருத்துவக் கல்லூரிக்கு உபகரணங்கள்
ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM
ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா்கள் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ உபகரணங்களை அளித்துள்ளனா்.
இக்கல்லூரியில் படித்த (1999-2001) முன்னாள் மாணவா்கள் கரோனா நோயாளிகளுக்குப் பயன்படும் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள செயற்கை சுவாச உபகரணங்களை பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு அன்பளிப்பாக அளித்தனா்.
மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளா் மு.பழனிசாமி, முதல்வா் என்.ராமன், முன்னாள் மாணவா்கள் சாா்பில் மு.விமல் ஆகியோா் பங்கேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலா்களிடம் உபகரணங்களை வழங்கினா்.
Advertisement