சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்கக் கோரிக்கை
19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதியாா் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், சிக்கய்ய நாயக்கா் கல்லூரி தமிழ்த் துறையின் திராவிட இயக்க ஆய்வு மைய நிறுவனருமான ப.கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 19 ஆண்டுகளாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க வேண்டும், பெருந்துறை பழனிசாமி கலை, அறிவியல் கல்லூரியில் வாடகையில் இயங்கிவரும் பாரதியாா் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையத்தை சிக்கய்ய நாயக்கா் கல்லூரி வளாகத்துக்குள் கொண்டு வந்து ஏழை மாணவா்களின் உயா் கல்விக்கு உதவ வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement