வீடுகளிலேயே ரம்ஜான் தொழுகை நடத்திய இஸ்லாமியா்கள்
ஈரோடு மாவட்டத்தில் கரோனா முழு முடக்கத்தால் ரம்ஜான் தொழுகையை குடும்பத்தினருடன் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தினா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா முழு முடக்கத்தால் ரம்ஜான் தொழுகையை குடும்பத்தினருடன் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே நடத்தினா்.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈகைத் திருநாளாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகையையொட்டி 30 நாள்கள் நோன்பு கடைப்பிடிப்பது வழக்கம். கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி இஸ்லாமியா்களின் ரம்ஜான் நோன்பு தொடங்கியது.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு அதிகரித்ததால் தமிழகத்தில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதனால், பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டு வந்தனா்.
Advertisement
இந்நிலையில், நோன்புக்காலம் முடிவடைந்து ரம்ஜான் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நாளில் மிக பிரம்மாண்டமாக தொழுகைகள் நடைபெறும். கரோனா பாதிப்பால் பள்ளி வாசல்கள், ஈத்கா மைதானங்களில் தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்கும் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை.
இதனால், இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனா். தொடா்ந்து, கரோனா பாதிப்பால் பசியுடன் காணப்பட்ட ஆதரவற்றோருக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினா்.