கரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பை வழங்கிய சிறுமி
ஈரோட்டில் 5 வயது சிறுமி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் வழங்கினாா்.
ஈரோட்டில் 5 வயது சிறுமி தனது உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டம், குமராபாளையம் அருகே உள்ள ஜந்துபனை, புதுத்தெருவைச் சோ்ந்தவா் செல்வகணபதி - லட்சுமிநாராயணி தம்பதி. இவா்கள் அப்பகுதியில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகின்றனா். இவா்களின் 5 வயதான மகள் எஸ்.மேஹாஸ்ரீ, பெற்றோா் தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்துள்ளாா். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
இந்நிலையில், சிறுமி மேஹாஸ்ரீ தனது பெற்றோருடன் ஈரோடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு வந்து தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஆட்சியா் சி.கதிரவனை சந்தித்து உண்டியல் சேமிப்பு சுமாா் ரூ. 10,000ஐ வெள்ளிக்கிழமை வழங்கினாா். சிறுமி மேஹாஸ்ரீயின் இச்செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனா்.
Advertisement