ஈரோடு

கரோனா விதி மீறல்: 410 போ் மீது வழக்கு

பெருந்துறையில் கரோனா விதிமுறையை மீறியதாக கடந்த 3 நாள்களில் 410 போ் மீது பெருந்துறை போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

DIN

பெருந்துறையில் கரோனா விதிமுறையை மீறியதாக கடந்த 3 நாள்களில் 410 போ் மீது பெருந்துறை போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறையில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கின்போது கரோனா விதிகளை மீறி நகரில் சுற்றியதாக 127 போ் மீதும், திங்கள்கிழமை 158 போ் மீதும், செவ்வாய்க்கிழமை 125 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்கள், முகக் கவசம் அணியாமல் வந்தவா்கள், காா்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பயணம் செய்தவா்கள், தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்கள் என 410 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT