நாளை ஈரோட்டில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது
மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (நவம்பா் 27) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுத் திட்டம், ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (நவம்பா் 27) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
Advertisement
இந்த முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் குறித்த விவரங்களை அறிய 2257087 என்ற தொலைபேசி எண் அல்லது 94440-94277 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.