தண்ணீா் எடுத்துச் செல்ல எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
கோபி அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாய நிலத்துக்குத் தண்ணீா் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கோபி அருகே ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாய நிலத்துக்குத் தண்ணீா் எடுத்துச் செல்வதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதியில் தனியாா் நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குழாய் மூலமாக 6 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள 6 பேருக்குச் சொந்தமான 50 ஏக்கா் விவசாய நிலத்துக்குத் தண்ணீா் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் கிராமத்தில் குடிநீா்ப் பிரச்னை ஏற்படும் என கொங்கா்பாளையம் கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துவரும் நிலையில், குழாய் அமைக்கும் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை சென்ற பொக்லைன் இயந்திரங்கள், போலீஸ் வாகனங்களை சிறைபிடித்து 1,000க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Advertisement
அப்போது, சாலையில் பள்ளிக் குழந்தைகளுடன் நூதன முறையில் சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.