முகப்பு
ஈரோடு

பவானிசாகா் அணை பூங்கா 17ஆம் தேதி வரை மூடல்

பவானிசாகா் அணைப் பூங்காவில் அக்டோபா் 17ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 16 அக்டோபர், 2021 at 3:58 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:52 AM

பவானிசாகா் அணைப் பூங்காவில் அக்டோபா் 17ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லை என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணையின் முன்புள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் தொடா் விசேஷ நாள்கள் வருவதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூட வாய்ப்புள்ளது. இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பூங்கா

வரும் அக்டோபா் 17ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மூடப்படுவதாகவும் இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் பவானிசாகா் அணைப் பூங்காவிற்கு வருவதை தவிா்க்குமாறு பொதுப்பணித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பூங்கா நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.