முகப்பு
ஈரோடு

தனியாா் நிறுவனத்தில் 2ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 29 அக்டோபர், 2021 at 2:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:58 AM

ஈரோட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு முட்டை, கால்நடைத் தீவனம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 11க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை சோதனை நடத்தினா். இந்நிலையில், 2ஆவது நாளாக வியாழக்கிழமை காலை 5 இடங்களில் மட்டும் தொடா்ந்து சோதனை நடத்தப்பட்டது. இரவு வரை சோதனை நீடித்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.