காவிக்கொடியை கருப்புக்கொடி வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின்
நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி, காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளம் அமைத்த திருப்பூருக்கு மகிழ்ச்சியுடன் வந்துள்ளேன். என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா என்கிற சூப்பர் ஸ்டாலின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. என்கிட்ட மோதாதே... இது பெரியாரின் தமிழ்நாடடா வம்புக்கு இழுக்காதே... இது அண்ணாவின் கோட்டையடா. இதைத்தான் தமிழ்நாடே தற்போது பாடுகிறது. நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது.
போர் என்றால் வெற்றி ஒன்றுதான் குறி. நம் குறி தவறவில்லை. இதுதான் திமுக, தமிழ்நாடு, திராவிட மாடல். தொகுதி மறுவரையறை பேராபத்தை 2023லே உணர்ந்து நாட்டிலேயே முதன்முதலாக எதிர்க்கத் தொடங்கியது நாம்தான். இதனால் பாதிக்கப்படக்கூடிய மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்களை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினோம். சட்டப்பேரவையிலும் தீர்மானம் போட்டோம். அப்போது சட்டப்பேரவையில் ஒன்று பேசியது அதிமுக, வெளியே போய் நாம் நாடகமாடுவதாக பேசியது. மசோதா வந்ததும் கருப்புக்கொடி போராட்டம் நாம் நடத்தினோம்.
Advertisement
Advertisement
சட்ட மசோதா நகலை எரித்தோம். நாமக்கல்லில் பற்றவைத்த தீ நாடு முழுவதும் பரவியது. அதன் வெப்பம் நேற்று நாடாளுமன்றத்தில் அந்த சதித் திட்டத்தை எரித்து சாம்பலாக்கியது. தமிழ்நாட்டின் உரிமை பிரச்னையில், மத்திய அரசு சிறப்பாக செய்யும் என பழனிசாமி கூறினார். அமித் ஷாவே சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள். அதிமுக போன்ற நாணயமற்ற கட்சியை யாரும் பார்த்ததில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்கிறது அதிமுக. அடிமைகளிடம் மறுபடியும் தமிழ்நாடு சிக்கலாமா? சிக்கினால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்காது. தமிழ்நாட்டை அடிமை அதிமுகவிடம் இருந்தும், மதவாத பாஜகவிடம் இருந்தும் நாம் பாதுகாக்க வேண்டும்.
அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
CM Stalin has stated that the black flag we flew has defeated the saffron flag.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.