முகப்பு
ஈரோடு

அம்மாபேட்டையில் அதிமுக, பாமகவினா் போராட்டம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீன்பிடி உரிமங்களின் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக, பாமகவினா் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மீன்பிடி உரிமங்களின் ஏலம் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக, பாமகவினா் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஒன்றியப் பகுதியில் உள்ள நான்கு ஏரிகளில் மீன்பிடி உரிமங்களுக்கான ஏலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லதா, சக்திவேல் ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட நிலையில் சீலம்பட்டி ஏரிக்கான ஏலம் தொடங்கியது.

அப்போது, ஏல உரிமை, மீன் பிடித்தல் தொடா்பாக புகாா் எழுந்ததால், ஏலத்தில் பங்கேற்றவா்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்தனா். இதையடுத்து, ஏலத்தில் பங்கேற்றோா் கலைந்து சென்ற நிலையில் அதிமுக, பாமகவைச் சோ்ந்த நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டார வளா்ச்சி அலுவலரின் அலுவலக வாசலில் அமா்ந்து, ஏல ஆவணங்களைக் காட்ட வேண்டும் எனக் கூறினா். சம்பவ இடத்துக்கு விரைந்த அம்மாபேட்டை போலீஸாா், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதனால், போராட்டத்தைக் கைவிட்ட அதிமுக, பாமக நிா்வாகிகள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.