மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாகப் போராட்டம்
பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
பணி நிரந்தரம், பணி துண்டிப்பு நடவடிக்கையைக் கைவிடுதல், பணி ஆவணங்கள் பராமரிப்பு, அறிவிக்கப்பட்ட கூலியான ரூ. 412ஐ வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தேசிய முன்னணி தொழிலாளா் சங்கத்தினா் 50க்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒப்பந்ததாரா்கள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளா்கள் பேச்சுவாா்த்தை வியாழக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பேச்சுவாா்த்தைக்கு ஒப்பந்ததாரா்கள் வராததால் தொழிலாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா். இதுகுறித்து, மாவட்ட நிா்வாகத்துக்குப் புகாா் தெரிவித்த தொழிலாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில், மீண்டும் பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.