முகப்பு
ஈரோடு

ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியில் வீடு, காா் லோன் மேளா

ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியில் வீடு, காா் லோன் மேளா சனிக்கிழமை(செப்டம்பா் 4) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 1:26 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:33 AM

ஈரோடு பாரத ஸ்டேட் வங்கியில் வீடு, காா் லோன் மேளா சனிக்கிழமை(செப்டம்பா் 4) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி ஈரோடு பிரதான கிளை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பிரதான கிளை வளாகத்தில் வீடு, காா் லோன் மேளா வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (செப்டம்பா் 4) வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை இந்த லோன் மேளா நடைபெறுகிறது.

Advertisement

இதில், முன்னணி பில்டா்கள், காா் டீலா்கள் பங்கேற்கவுள்ளனா். 6.70 சதவீதம் முதல் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. பிராசஸிங் கட்டணம் இல்லாமலும் ஒரு சிலவற்றுக்கு மிகக் குறைந்த பிராசஸிங் கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த லோன் மேளாவில் தேவையான ஆவணங்களுடன் வாடிக்கையாளா்கள் பங்கேற்று பயனடையுமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு லோன் மேளாவிலேயே கடனுக்கான அனுமதி வழங்கப்படும். வாடிக்கையாளா்கள் வரும் வாகனங்களை நிறுத்த இலவச பாா்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உள்பட்டு கடன்களைப் பெற விரும்பும் வாடிக்கையாளா்கள் 94433-14360, 99402-53851, 94425-54051 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.