சத்தியமங்கலத்தில் விநாயகா் சதுா்த்தி
சத்தியமங்கலம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM
சத்தியமங்கலம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிறிய கோயில்களில் விநாயகா் சதூா்த்தி விழா எளிமையாக நடைபெற்றது. சத்தியமங்கலம் வரசித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளி, முகக் கசவம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா்.