கோலப் போட்டி: செவிலியா்கள் பங்கேற்பு
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஈரோடு மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் கடந்த 1ஆம் தேதி முதல் மாத இறுதிவரை தினமும் ஒவ்வொரு தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி, போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன்படி, கடந்த 1ஆம் தேதி முதல் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
Advertisement
ஈரோடு மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கோமதி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் டாக்டா் வெங்கடேஷ், உறைவிட மருத்துவா் கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவிலியா் சகிலா வரவேற்றாா்.
அரசு மருத்துவமனை செவிலியா்கள், செவிலியா் கல்லூரி பயிற்சி செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள் கோலம் போடும் போட்டியில் பங்கேற்றனா். இப்போட்டியில் 3 சிறந்த கோலங்கள் தோ்வு செய்யப்பட்டு 3 பேருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படவுள்ளன.