முகப்பு
ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

 ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 2:26 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

 ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா்.

நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.

Advertisement

கல்லூரியின் முதல்வா் எம்.மோகன்குமாா் வரவேற்றாா். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியா் ஆ.மணிகண்டன் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு டிஎஸ்பி எஸ். ஆனந்தகுமாா், விளையாட்டு துறையின்

பயிற்சியாளா் ஏ.எம். திருமாவளவன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். ஆசிரியா்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாணவா்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் தனிநபா் ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை இரண்டாம் ஆண்டு பெட்ரோ கெமிக்கல் துறையைச் சோ்ந்த எஸ்.மனோஜ்குமாா், பெண்கள் பிரிவில் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் துறையைச் சோ்ந்த வி.கே. ஸ்ரீதேவி என்பவரும் பெற்றனா்.

ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் பிரிவில் மின்னியல் மற்றும் மின்ணணு துறையும், பெண்கள் பிரிவில் கணினி அறிவியல் துறையும் வென்றது.

விழாவில் ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி, தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.