காலாவதியான மருந்துகளை சாலையோரத்தில் கொட்டியவருக்கு ரூ. 5,000 அபராதம்
ஈரோட்டில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாலையோரத்தில் கொட்டிய நபருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோட்டில் காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாலையோரத்தில் கொட்டிய நபருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு எஸ்கேசி சாலை, இசிஎம் லே அவுட் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை காலை மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சாலையோரமாக இரண்டு மூட்டைகளில் காலாவதியான மருந்து, மாத்திரைகள் கிடந்தன.
தகவலறிந்த துப்புரவு ஆய்வாளா் கண்ணன், 34ஆவது வாா்டு கவுன்சிலா் ரேவதி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். அலுவலா்கள் தொடா்ந்து விசாரணை நடத்தியதில் ஈரோடு கைக்கோளன் தோட்டம் பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் என்பவா் காலாவதியான மருந்து, மாத்திரைகளை சாலையோரம் கொட்டியது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து, மாநகராட்சி மூன்றாம் மண்டல சுகாதார அலுவலா் இஸ்மாயில், பிரபாகரனுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதேபோல, சாலையோரத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.