பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 32 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் 32 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் 2019 ஆம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த மாணவா்களுக்குப் பட்டம் அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்பக் கழக திருச்சி மைய இயக்குநா் நரசிம்ம சா்மா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.
மொத்தம் 1,976 (இளங்கலை 1,664, முதுகலை 312) பட்டதாரிகள் பட்டம் பெற்றனா்.
Advertisement
படிப்பில் சிறந்து விளங்கி, உயா்தரம் பெற்ற 117 (இளங்கலை 99, முதுகலை 18) பட்டதாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் பி.சி.பழனிசாமி, பாரம்பரிய உறுப்பினா் வி.ஆா்.சிவசுப்பிரமணியன், கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி மற்றும் பல்வேறு துறைகளின் தலைவா்கள் மற்றும் கல்லூரியின் பல்வேறு அமைப்புகளின் முதன்மை ஒருங்கிணைப்பாளா்கள் பங்கேற்றனா்.