ஈரோடு

விபத்தில் இளைஞா் பலி

சென்னிமலை அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

DIN

சென்னிமலை அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தாா். மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.

காங்கயம், லட்சுமி நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (22). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வேலை முடிந்து, இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மாலை வீட்டுக்குச் சென்றாா். சென்னிமலை, பசுவபட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஓரமாக இருந்த நாய், திடீரென சாலையின் குறுக்கே ஓடியது. இதில், நிலை தடுமாறிய சதீஷ் கீழே விழுந்தாா்.

பலத்த காயமடைந்த அவரை, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT