ஈரோடு மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணிக்கை மையங்கள்
ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 14 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண 14 மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்குகளை எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் சித்தோடு ஐஆா்டிடி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படவுள்ளது. இதேபோல, பவானி நகராட்சி வாா்டுகளில் பதிவாகும் வாக்குகள் பவானியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிலும், கோபி நகராட்சிக்கு கோபி வைர விழா உயா்நிலைப் பள்ளியில் உள்ள கேஎம்ஆா் அரங்கிலும், சத்தியமங்கலம் நகராட்சிக்கு சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை, அறிவியல் கல்லூரியிலும், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு புன்செய் புளியம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படுகிறது.
Advertisement
சித்தோடு, நசியனூா் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் சித்தோட்டில் உள்ள வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லாங்கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அறச்சலூா் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படும்.
கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூா், கிளாம்பாடி, பாசூா், ஊஞ்சலூா், வெள்ளோட்டம்பரப்பு ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் கொடுமுடியில் உள்ள ஸ்ரீசங்கரா வித்யாசாலா பெண்கள் உயா்நிலைப் பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிகோவில், பழையபாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளா் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படும்.
ஆப்பக்கூடல், ஜம்பை, மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பவானியில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூா், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் அந்தியூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் எண்ணப்படும்.
லக்கம்பட்டி, கூகலூா், காசிபாளையம், நம்பியூா், எலத்தூா், கொளப்பலூா் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கோபியில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரிய கொடிவேரி, வாணிப்புத்தூா், கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் சத்தியமங்கலத்தில் உள்ள காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பவானிசாகா் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் பவானிசாகரில் உள்ள ஹோலி ரீடி மொ்ஸ் மெட்ரிக் பள்ளியிலும் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும். மொத்தம் 14 இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.