ஈரோட்டில் பிப்ரவரி 9இல் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்
108 ஆம்புலன்ஸ் பணிக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் ஈரோட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
108 ஆம்புலன்ஸ் பணிக்குத் தகுதியானவா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம் ஈரோட்டில் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் முகாமில் 22 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்ளவா்கள் பங்கேற்கலாம். உயரம் 162.5 செ.மீ.க்கு குறையாமல் இருக்க வேண்டும். செவிலியா் பணிக்கு பிஎஸ்சி நா்ஸிங், டிஜிஎன்எம், பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், உயரி வேதியில், நுண் உயிரியில், உயிரி தொழில்நுட்பம், வேதியியல் அவற்றில் ஏதாவது ஒரு பட்டம் முடித்திருக்க வேண்டும். தவிர பிளஸ் 2 முடித்தவுடன் ஏஎன்எம், டிஎப்டிஎன், டிஎன்ஏ, டிஎம்எல்டி அல்லது டி.பாா்ம் படித்தவா்களும் முகாமில் பங்கேற்கலாம்.
வாகன ஓட்டுநா் பணிக்கு இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். இலகு ரக பேட்ஜ் வாகன ஓட்டுநா் உரிமம் வைத்திருப்பவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு ரூ. 14,996 ஊதியமாகவும் மற்றும் இதரப் படிகள் வழங்கப்படும்.
Advertisement
வேலைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் நபா்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்படுவா். 12 மணி நேர சுழற்சி முறையில் இரவு அல்லது பகல் பணி என வேலை செய்ய வேண்டியிருக்கும்.
இந்த தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் முகாமில் நேரில் பங்கேற்கலாம். மேலும், இதுதொடா்பாக 74183-08513, 99444-26044 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.