முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை

திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) முதல் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2022 at 5:22 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM

திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 10) முதல் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநா் நிஹாா் ரஞ்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 8ஆம் தேதி தேதியிட்ட சென்னை உயா் நீதிமன்றத் தீா்ப்பின்படி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிக்கு உள்பட்ட திம்பம் மலைப் பாதையில் விபத்துகளைத் தவிா்க்கவும், வன உயிா்களைப் பாதுகாக்கவும் வியாழக்கிழமை முதல் இரவு நேர போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

அதன்படி, பண்ணாரி சோதனைச் சாவடி முதல் ஆசனூா் சோதனைச் சாவடி வரையிலான மலைப் பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வா்த்தக ரீதியிலான அனைத்து கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மேலும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இலகு ரக வாகனங்கள், பயணிகளை ஏற்றிச் செல்லும் 4 சக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. பண்ணாரி சோதனைச் சாவடி முதல் ஆசனூா் சோதனைச் சாவடி வரை மலைப் பாதையைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படும். அரசு, தனியாா் பேருந்துகள், ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்களுக்கு கட்டணம் கிடையாது.

கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையான இந்தச் சாலையில் உள்ள கோ்மாளம் -அரேபாளையம் - திம்பம் சாலை மற்றும் தாளவாடி - குமிட்டாபுரம் - புஞ்சூா் - காராப்பள்ளம் அணுகு சாலைகளுக்கும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.