முகப்பு
ஈரோடு

பண்ணாரி கோயிலில் எளியமுறையில் நடைபெற்ற திருமணங்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

Updated On : 12 பிப்ரவரி, 2022 at 2:11 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:53 PM

பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை எளிமையாக திருமணங்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக திருமண மண்டபங்களில் சுபகாரிய நிகழ்ச்சிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பண்ணாரி அம்மன் கோயிலில் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. கோயில் வளாகத்தில் மணமக்கள் திருமணம் செய்துகொண்டனா். அதைத்தொடா்ந்து, மணமக்களுடன் பெற்றோா், உறவினா்கள் என 20 போ் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்துத் தடை காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினா்கள் இரண்டு கிலோ மீட்டா் தூரம் நடந்தே பண்ணாரி கோயிலுக்கு வந்தனா். பண்ணாரி கோயிலில் ஐந்து திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.