முகப்பு
ஈரோடு

மாநகராட்சிப் பள்ளியில் வகுப்பறைகள் புதுப்பிப்பு

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு மாணவா்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 4:16 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

ஈரோடு வீரப்பன்சத்திரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் புதுப்பிக்கப்பட்டு மாணவா்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆற்றல் அறக்கட்டளை அறங்காவலா் அசோக் தலைமை வகித்தாா். திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாகா், தலைமை ஆசிரியை ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ திருமகன் ஈவெரா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை வளாகத்தை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா்- ஆசிரியா் சங்கத் தலைவா் ஆறுமுகம், ஆசிரியை கோமதி, காங்கிரஸ் கட்சி மாநகா் மாவட்டத் தலைவா் ஈ.பி.ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.