முகப்பு
ஈரோடு

4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகள்

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 14 வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 4:17 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 14 வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ், அந்தியூா் அருகே உள்ள பா்கூா் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் நீண்டகாலக் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் மலைக் கிராமங்களில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி 8 சாலைப் பணிகள் 12.5 கிலோ மீட்டா் நீளத்தில் ரூ. 2 கோடியே 88 லட்சத்து 1,000 மதிப்பீட்டிலும், 2 சிறுபாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.68 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

பா்கூா் கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.49.39 லட்சம் மதிப்பீட்டிலும், கத்திரிபட்டி வன எல்லை முதல் ஈசலாங்காடு முடிய ரூ.48.14 லட்சம் மதிப்பீட்டிலும், பாலபந்தனூா் சாலை முதல் பெஜலட்டி வரை ரூ.25.53 லட்சம் மதிப்பீட்டிலும், கெப்பக்காடு சாலை முதல் பெஜலட்டி வரை ரூ.36.65 லட்சம் மதிப்பீட்டிலும், கோவில்நத்தம் மின் கம்பம் முதல் அக்னிபாவி கொங்காடை வரை ரூ.32.85 லட்சம் மதிப்பீட்டிலும், பெஜிலிபாளையம் திக்கையூா் சாலை வரை ரூ.4.38 லட்சம் மதிப்பீட்டிலும் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேவா்மலை வழியாக தாமரைக்கரை முதல் மடம் வரை ரூ.34.11 லட்சம் மதிப்பீட்டிலும், ஈரட்டி வழியாக தாமரைக்கரை முதல் மடம் வரை ரூ.34.30 லட்சம் மதிப்பீட்டிலும் சிறு பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அம்மாபேட்டை அருகே உள்ள வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் 3.5 கிலோ மீட்டா் நீளத்தில் ரூ.66.47 லட்சம் மதிப்பீட்டில் மலைப் பகுதி கிராமங்களை இணைக்கும் இணைப்புச் சாலை பணிகள் செயல்பட்டுத்தப்பட்டு வருகின்றன. குரும்பானூா் சாலை முதல் வன எல்லை வரை ரூ.66.47 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பிச்சாலை அமைத்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னிமலை அருகில் உள்ள புன்செய்பாலத்தொழுவு ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒரு மீட்டா் நீளத்தில் ஒரு ஊரக இணைப்புச் சாலை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

ஊத்துக்குளி சாலை முதல் வசந்தம் நகா் சாலை வரை ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கப்பி சாலை அமைத்தல் பணியும், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், பவானி அருகே உள்ள மைலம்பாடி பகுதியில் ஒரு கிலோ மீட்டா் நீளத்தில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணி ரூ. 49.81 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மைலம்பாடி வெள்ளித்திருப்பூா் சாலை முதல் கரட்டுவலசு சாலை வரை ரூ.49.81 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச்சாலை அமைக்கும் பணியும், பா்கூா் ஒன்னக்கரை முதல் முத்தூா் வனச்சாலை வரை ரூ.41.31 லட்சம் மதிப்பீட்டில் ஊரக இணைப்புச் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தியூா், அம்மாபேட்டை, சென்னிமலை மற்றும் பவானி ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.4.94 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 14 வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.