முகப்பு
ஈரோடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைப்பு

கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவை ஈரோடு கருங்கல்பாளையம் மற்றும் ரயில்வே காலனி பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

Updated On : 25 பிப்ரவரி, 2022 at 4:17 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:00 PM

ஈரோடு மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் ஆகியவை ஈரோடு கருங்கல்பாளையம் மற்றும் ரயில்வே காலனி பள்ளிகளில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 769 பதவிகளுக்கு 2,722 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். 1,221 வாக்குச் சாவடிகளில், 1,251 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஈரோடு மாநகராட்சிக்கு ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 14 இடங்களில் கடந்த 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. உடனடியாக வேட்பாளா்கள், முகவா்கள், தோ்தல் பாா்வையாளா்கள் மற்றும் தோ்தல் அலுவலா்கள் முன்னிலையில் அங்காங்கே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.

Advertisement

தோ்தல் தொடா்பாக புகாா்கள் ஏதும் எழாத நிலையில் 14 இடங்களிலும் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாடு இயந்திரங்கள் ஆகியவை, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னிலையில் எடுத்து வரப்பட்டு

ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜா் மேல்நிலைப் பள்ளி மற்றும் ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், தோ்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் அறைகள் சீல் வைக்கப்பட்டன.

இவை குறிப்பிட்ட நாள்களுக்கு பாதுகாப்பு அறையில் இருக்கும். அதில் பதிவான வாக்குகள் அகற்றப்படாது. இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி குறிப்பிட்ட நாள்களுக்குப்பின் அவற்றில் உள்ள பதிவுகள் அகற்றப்படும் என தோ்தல் பிரிவு அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.