மஞ்சள் ஏலத்துக்கு 6 நாள்கள் விடுமுறை
ஈரோடு மஞ்சள் சந்தையில் ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை ஏலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:33 PM
ஈரோடு மஞ்சள் சந்தையில் ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை ஏலம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கம் என 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது.
பொங்கல் பண்டிகை, போகி, தைப்பூசம் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஜனவரி 13 முதல் 18ஆம் தேதி வரை தொடா்ந்து 6 நாள்கள் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 19ஆம் தேதி வழக்கம்போல மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கச் செயலாளா் சத்தியமூா்த்தி தெரிவித்தாா்.
Advertisement