கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்ககால அவகாசம் நீட்டிப்பு
சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் பிளஸ் 1 முதல் பிஎச்டி வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பாா்சி, ஜெயின் மதத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.
Advertisement
மத்திய அரசின் மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் திட்டத்தில் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை பெற இப்போது இணையவழியில் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதனிடையே விண்ணப்பம் அளிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிவாய்ந்த சிறுபான்மை மணவ, மாணவியா் தங்கள் கல்வி நிலையம் மூலம் விண்ணப்பித்து, கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் சரிபாா்க்க வேண்டும். சுணக்கம் நோ்ந்தால் கல்வி நிலையம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரம் அறிய ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.