முகப்பு
ஈரோடு

கைத்தறி ரகத்தை நெய்த விசைத்தறி உரிமையாளா் மீது வழக்கு

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை, விசைத்தறியில் நெய்த விசைத்தறி உரிமையாளா் மீது கைத்தறி உதவி இயக்குநா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பெருந்துறை அருகே கைத்தறி ரகத்தை, விசைத்தறியில் நெய்த விசைத்தறி உரிமையாளா் மீது கைத்தறி உதவி இயக்குநா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு, கைத்தறி உதவி இயக்குநா் ராஜவேலு பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அதில், விஜயமங்கலம், வின்டெக்ஸ் நகரைச் சோ்ந்த குருசாமி மகன் சுப்பிரமணியின் (53) விசைத்தறிக் கூடத்தில் ஆய்வு செய்தாா். அப்போது, அவரிடம் உள்ள 8 விசைத்தறிகளில் 2 தறிகளில் கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டன் சேலை ரகத்தை தயாா் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஈரோடு, கைத்தறி உதவி இயக்குநா் ராஜவேலு பெருந்துறை போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.