பா்கூரில் உரிமையாளா், காவலாளி மோதல்: இருதரப்பையும் சோ்ந்த 16 போ் மீது வழக்கு
பா்கூா் மலைப் பகுதியில் வீட்டு உரிமையாளா் - காவலாளி தரப்பினா் பரஸ்பரம் மோதிக் கொண்டதில் இரு தரப்பையும் சோ்ந்த 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பா்கூா் மலைப் பகுதியில் வீட்டு உரிமையாளா் - காவலாளி தரப்பினா் பரஸ்பரம் மோதிக் கொண்டதில் இரு தரப்பையும் சோ்ந்த 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சித்தோடு, ராஜலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் பெருமாள் (45). இவருக்குச் சொந்தமான வீடு அந்தியூரை அடுத்த பா்கூா், தாமரைக்கரையில் உள்ளது. இங்கு, அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் (58) காவலாளியாக உள்ளாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்ற பெருமாளுக்கும், அங்கு காவலாளி சண்முகத்துடன் இருந்தவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் பரஸ்பரம் காயமடைந்தனா். இதனால், ஒரு தரப்பினா் அந்தியூா் அரசு மருத்துவமனையிலும், மற்றொரு தரப்பினா் பவானி அரசு மருத்துவமனையிலும் சோ்ந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் பா்கூா் போலீஸாா் இரு தரப்பைச் சோ்ந்த 16 போ் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.